உலகின் மகிழ்ச்சிகரமான நாடு!


 

உலகின் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐநா வெளியிட்ட குறியீட்டு பட்டியலில் குறைவான மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது நாடாக லெபனான் உள்ளது.


செர்பியா, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் நல்வாழ்வு குறியீட்டு மதிப்பெண்களில் நல்ல ஏற்றத்தை கண்டுள்ளது. பட்டியலில், லெபனான், வெனிசுலா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளன.


பொருளாதார சரிவை சந்தித்துவரும் லெபனான், பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தை பிடித்துள்ளது. 146 நாடுகள் கொண்ட பட்டியலில் ஜிம்பாப்வேக்கு அடுத்த இடத்தில் லெபனான் உள்ளது.


அதேசமயம் இந்த பட்டியலில் பாகிஸ்தானுக்கு பிந்தைய இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான் 121ஆவது இடத்திலும் இந்தியா 136ஆவது இடத்திலும் உள்ளது.


போரால் மிக பெரிய தாக்கத்தை சந்தித்துவரும் ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கைப்பற்றினர். தற்போது பட்டியலில்இ இந்த நாடு கடைசி இடத்தில் உள்ளது. தகுந்த உதவி கிடைக்காவிட்டால் இந்த குளிர்காலத்தில், ஐந்து வயதுக்கு குறைவாக உள்ள 10 லட்சம் குழந்தைகள் பசியால் உயிரிழக்கலாம் என்றும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.


பட்டியலை தயார் செய்த துணை ஆசிரியர் ஜான்-இம்மானுவேல் டி நெவ் இதுகுறித்து கூறுகையில்இ 'போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் பொருளற்ற சேதத்தை அப்பட்டமாக இது குறியீடு நினைவூட்டுகிறது' என்றார்.


பொருளாதார மற்றும் சமூக ரீதியான மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பது ஆராயப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக உலக மகிழ்ச்சிகர குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. மூன்றாண்டு காலத்தில்இ அதன் சராசரி கணக்கிடப்பட்டு பூஜ்யத்திலிருந்து 10 மதிப்பெண்கள் வரை அளிக்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷிய போர் தொடங்குவதற்கு முன்பே கடைசி பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது.


மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளே பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. முதல் இடத்தில் பின்லாந்தும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளது. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. மூன்று இடங்கள் முன்னேறி அமெரிக்கா 16ஆவது இடத்தில் உள்ளது. 17ஆவது இடத்தில் பிரிட்டனும் 20 ஆவது இடத்தில் பிரான்ஸ் நாடும் இடம்பெற்றுள்ளது.


தனிப்பட்ட அளவில் மக்களின் நல்வாழ்வு மட்டும் இன்றிஇ ஜிடிபி, சமூக பாதுகாப்பு, தனி மனித சுதந்திரம், ஊழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மக்களிடம் கருத்துகணிப்பு எடுக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்படுகிறது.


No comments:
Write comments