எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்


 

இடைநிறுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


3,500 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


அதனடிப்படையில் இன்று காலை முதல் உள்நாட்டு பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களை விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Write comments