நிலவில் 4 ஜி!


 'சிங்களத் தீவிற்கு ஒரு பாலம் அமைப்போம்´ என்று பாரதியார் சொன்ன மாதிரிஇ 'நிலவில் 4 ஜி சேவை அமைப்போம்´ என்கிறார் நிஷாந்த் பத்ரா. தில்லியில் வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த பத்ரா இந்தோரில் கணினி இயல் பட்டப்படிப்பு படித்து அமெரிக்காவிலும் படித்தவர். இப்போது 'நோக்கியா´ நிறுவனத்தின் கொள்கை மற்றும் தொழில்நுட்பத்துறையின் தலைவராக உள்ளார்.


'நிலவில் மட்டுமல்ல ... நிலவையும் தாண்டி செவ்வாயிலும் 4 ஜி அலைவரிசை சேவையை வழங்குவோம்´ என்று அறிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, நிலவுடன் தொடர்பு கொள்ள வசதி செய்து தர வேண்டிய பொறுப்பினை 'நோக்கியாவுக்கு வழங்கியுள்ளது. இப்போது நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் உள்ளவரை அலைபேசியில் அழைப்பது போலஇ சந்திரனிலிருந்து பூமிக்கு 4 ஜி அலைவரிசையில் தொடர்பு கொள்ள முடியுமா.... நிலாவில் திரைப்படம் அல்லது காணொளியைக் காண முடியுமா....´ என்பதுதான் இப்போதையைக் கேள்வி.


'நிலவில் 4 ஜி அலைவரிசை வசதி நிறுவப்பட்டால், இந்த வசதிகள் சாத்தியம்தான். இந்த வசதி ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பொது மக்களுக்கு வழங்கப்படமாட்டாது´ என்கிறார் பத்ரா. நாசா 1969 -இல் செய்த மாதிரி, 2024 வாக்கில் நிலாவுக்கு விண்வெளி வீரர்களை மீண்டும் அனுப்பவுள்ளது. நிலவில் இறங்கும் வீரர்கள் பல திசைகளில் பயணம் செய்து நிலவைப் பற்றி ஆய்வு செய்வார்கள். அப்போது அவர்களுக்குள் பேச, தொடர்பு கொள்ள ஒரு அலைவரிசை தேவைப்படும். நிலவில் 4 ஜி சேவை இருந்தால் அதை பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் நிலவில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளலாம்.


2024 இல் விண்வெளி ஆராய்ச்சியில் முதல் முறையாக கருப்பு இனப்பெண்ணான ஜெஸ்ஸிகா வாட்கின்ஸ்ûஸ நிலாவிற்கு நாசா அனுப்பும். அப்போது நிலவில் 4 ஜி அலைவரிசை வசதி நிலவில் ஏற்படுத்தப்படவேண்டும். ஜெஸ்ஸிகாவுடன் பயணிக்கும் இதர 17 விண்வெளி வீரர்கள் நிலவின் தரை அமைப்பை ஆராய்ச்சி செய்ய நீண்ட நாள்கள் நிலவில் இருப்பார்கள்.


'விண்வெளி வீரர்களுக்குள்ளும், பூமியில் நாசாவுடன் தொடர்பு கொள்ளவும் 4 ஜி அலைவரிசை வசதி வெகு விரைவில் தயாராகிவிடும்... நிலவின் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி அலைவரிசை நிலையத்தை அமைக்க வேண்டும். பூமியில் இருப்பது போல் அலைவரிசை கோபுரங்கள், நிலவில் தேவையில்லை. நிலவில் கட்டடங்கள் இல்லாததால் 4 ஜி அலைகள் தடைபடாது. அதனால் கோபுரங்கள் அவசியமில்லை. இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. துறை சார்ந்த அறிவுள்ளவர்களுக்குப் பஞ்சமில்லை. இந்த முயற்சியில் இந்தியாவின் கணினி வல்லுநர்களையும் இணைத்துக் கொள்வோம்´ என்கிறார் பத்ரா.


No comments:
Write comments