ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்தது.

நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Write comments