இராஜாங்க அமைச்சரின் மகன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்


 

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சம்பவம் தொடர்பில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் 2 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்களில் இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Write comments