41 கோடி பேருக்கு உலகில் கொரோனா!


 

உலகில் மொத்தம் 41 கோடி பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி உலகில் மொத்தம் 410,024,095 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 5,809,171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 10,189,927,521 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 77,702,689 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 919,171 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் பிரேசிலும் உள்ளன.


இந்தியாவில் 42,586,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 507,981 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 27,434,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 638,346 ஆக உள்ளது.

No comments:
Write comments