கூட்டமைப்பின் 3 எம் பிகள் முஸ்லிம் புத்திஜீவிகளுடன் முக்கியமான சந்திப்பு


 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்றது.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்.பி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தேசிய பட்டியல் எம். பி த. கலையரசன் ஆகியோர்.கூட்டமைப்பு சார்பாக பங்கெடுத்தனர்.


முஸ்லிம் புத்திஜீவிகள் சார்பாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. சர்ஜூன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களான ரமீஸ் அப்துல்லா மற்றும் பௌசர் ஆகியோர் பங்கெடுத்தனர்.


மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் - முஸ்லிம் உறவை பலப்படுத்துவது, இரு இனங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு இணக்க தீர்வு எட்டுவது ஆகியன குறித்து ஆராயப்பட்டது. விரைவில் மீண்டும் சந்தித்து பேசுவது என தீர்மானித்து விடை பெற்றனர்.

No comments:
Write comments