விடைபெறும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பிரதேச தளபதி...


 


இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சில்வா அவர்கள் 34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிய அவர் விடை பெற்று செல்லும் முன் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை (06) அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.


பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவரது அர்ப்பணிப்பு மற்றும் பணிகளை பாராட்டியதுடன்இ இராணுவத்திற்கு அவர் கொண்டிருந்த விசுவாசம் மற்றும் நேர்மையைப் பற்றி உயர்வாகப் கூறினார்.


வடமத்திய முன்னோக்கு பராமரிப்புப் பிரதேச தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை இராணுவ சேவைப் படையணியில் பல முக்கிய நியமனங்களைச் வகித்தமை குறிப்பிடத்தக்கது.


வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியுடனான கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவரது எதிர்காலத் திட்டங்களைக் கேட்டறிந்தார்.


மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.


தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவரது பிள்ளைகளுடன் உரையாடியதுடன், அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் சவால்கள் குறித்தும் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.


வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததுடன், இராணுவத் தளபதியிடமிருந்து தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்குக் கிடைத்த ஊக்கம் பற்றிக் குறிப்பிட்டார்.


கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா, வெளியேறும் மேஜர் ஜெனரல் பிரியந்த சில்வாவுக்கு பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும், குடும்பத்திற்கு விசேட பரிசையும் வழங்கினார்.

No comments:
Write comments