பயங்கரவாதச் செயற்பாடுகளை எதிர்கொள்ள ஒத்துழைப்பு அவசியம்!ஒத்துழைப்புஇ ஒருங்கிணைப்பு, நிபுணத்துவ பகிர்வு மற்றும் பொதுவான சட்ட அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கான சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குற்ற-தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 'கிரிப்டோ கரன்சிகளின் நிதி பயங்கரவாதத்திற்கு எதிரான பயன்பாடு' தொடர்பில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்தார்.


இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி செய்தி நிறுவனமான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிராந்திய வல்லுநர்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற மாநாடொன்றிற்கு ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இது தொடர்பாக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு; 'தெற்காசிய பிராந்தியத்தின் சர்வதேச எல்லைகளில் பயங்கரவாதிகள் மற்றும் குற்றச் செயல்பாட்டாளர்களின் நாடுகடந்த மற்றும் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு, பொதுவானதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான கொள்கைகளுக்கமைவான அடிப்படையில் சட்டத்தை அமுலாக்கும் நிறுவன உட்கடமைப்பொன்றை உருவாக்க வேண்டியது அவசியமென இலங்கை பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ ஜெனரல் ஷவேந்திர சில்வா வியாழக்கிழமை (20) தெரிவித்தார்.


அதற்கமைய பயங்கரவாதம் அல்லது கூட்டு வன்முறைச் செயற்பாடுகளை எதிர்ப்பது தொடர்பில் அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படும் நியாயமான முயற்சிகள் தொடர்பில் தெற்காசிய பிராந்திய ரீதியிலான ஒப்பந்தமொன்றை கைசாத்திட வேண்டியதன் அவசியம் பற்றிய கலந்துரையாடல்களை மேம்படுத்த வேண்டியதும் அவசியமாகும். மேலும்இ அதற்கான தீர்மானங்களை நிறுவன கட்டமைப்பொன்றின் கீழ் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் மற்றும் நிபுணத்துவ தெரிவுகளை பறிமாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தினார்.


'எங்கள் பிராந்தியத்தின் சர்வதேச எல்லைகளில் பயங்கரவாதிகள் மற்றும் குற்றச் செயல்பாட்டாளர்களின் நாடு கடந்த மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிகள் என்பன அவசியம்இ' என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்காக சுங்க திணைக்கள சோதனைச் சாவடிகளில் தகவல் பரிமாற்ற பொறிமுறைகளை நிறுவுதல்இ குடியேற்றச் செயற்பாடுகளுக்கான தடைகளை விதித்தல் மற்றும் ஆயுதங்கள்இ போதைப்பொருட்கள்இ போர் கருவிகள்இ ஆபத்தான பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்து வைத்தல் போன்ற செயற்பாடுகளை தடுப்பதற்கான ஒத்துழைப்புக்கள் அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.


அதன்படிஇ சந்தேநக நபர்கள் தொடர்பிலான சாட்சியங்களை சேகரித்தல்இ தேடப்படும் நபர்கள் தொடர்பிலான தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளூடாக ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ள முடியுமென தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வாஇ பயங்கரவாத மற்றும் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கையாளுதல் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புக்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.


அதன்படிஇ குறிப்பிட்ட நாடுகளின் இராணுவ வீரர்களுக்கு மாத்திரம் பயிற்சிகளை வழங்கும் முறைக்கு மாறாக தெற்காசிய பிராந்தியதத்தின் படையினருக்கு கூட்டுப்பயிற்சிகளை வழங்குவது அவசியமாகும். அத்தோடுஇ பிராந்திய அளவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிராந்திய நிதியுதவி அவசியப்படும் எனத் தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அண்மைய காலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கான நிதி உதவிகளை வழங்கும செயற்பாடுகளில் அதிகரிப்பை காண முடிகிறது என்றும் தெரிவித்தார். 'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் அனுபவமிக்க இராணுவம் என்ற வகையில் எங்களுக்கு ஒத்துழைப்பு தேவைப்படுவது அத்தோடு எதிர்ப்புக்களை சமாளிப்பது தொடர்பில் எங்கள் வசமிருக்கும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.


அதேபோல் பிராந்திய நாடுகள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தின் போது நாடுகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டுத் தன்மை மிகவும் அவசியமானதெனவும் தளபதி சுட்டிக்காட்டினார்.


No comments:
Write comments