ஒமிக்ரோன் கொரோனாவால் களையிழந்த புத்தாண்டு!


புதிய ஒமிக்ரோன் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமுடக்க விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், 2022 ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் வழக்கமான உற்சாகம் குறைந்துள்ளது.


இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:


'தொல்லை நிறைந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து விடுபடுவோம்; பிறக்கின்ற 2022 ஆம் ஆண்டாவது நல்லபடியாக அமையட்டும்' என்பதுதான் இந்தப் புத்தாண்டில் உலகம் முழுவதிலும் உள்ள சாமானிய மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.


ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளே ரத்து செய்யப்பபட்டுள்ளன. இதன் காரணமாக, தொடா்ந்து 2 ஆவது ஆண்டாக உலகில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.


உலகின் மற்ற பகுதிகளைவிட புத்தாண்டை மிக விரைவாகக் கொண்டாடும் நாடுகளில் ஒன்றான நியூஸிலாந்தில், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மந்தமாகவே நடைபெற்றன. அந்த நகரின் ஆக்லாந்து நகரின் முக்கிய பகுதிகளில் வழக்கமாக உற்சாகமளிக்கும் வாணவேடிக்கைகளுக்குப் பதிலாக லேசா் ஒளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


அண்டைநாடான அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் திடீரென தீவிரமடைந்தாலும், சில பகுதிகளில் புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உண்மையான புத்தாண்டு நிகழ்ச்சிகள் எவ்வாறு இருக்கும் என்பதை அவற்றைப் பாா்த்திராத சிறுவா்களுக்கு உணா்த்துவதற்காக அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அண்டைநாடான அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் திடீரென தீவிரமடைந்தாலும்இ சில பகுதிகளில் புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உண்மையான புத்தாண்டு நிகழ்ச்சிகள் எவ்வாறு இருக்கும் என்பதை அவற்றைப் பாா்த்திராத சிறுவா்களுக்கு உணா்த்துவதற்காக அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


ஒமிக்ரோனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தாலும், 2021 ஆம் ஆண்டில் உலக மக்களை உலுக்கியெடுத்த டெல்டா வகை கொரோனாவைப் போலன்றி அந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் உடல்நிலை மோசமடைவதற்கான அபாயம் மிகவும் குறைவாக உள்ளது. ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவா்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமும் அவா்கள் அந்த நோயால் உயிரிழக்கும் அபாயமும் மிகக் குறைவாக உள்ளதாக இதுவரை வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.


மேலும், ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் உருவாகும் நோயெதிா்ப்பு ஆற்றல், டெல்டா போன்ற பிற வகை கொரோனாக்களுக்கு எதிராகவும் செயல்படும் என்று சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


எனவே, மக்களிடையே மிக வேகமாகப் பரவினாலும், ஏராளமானவா்களின் உடலில் நோயெதிா்ப்பு ஆற்றலை இயற்கையாக உருவாக்குவதன் மூலம் உலகில் கரோனா பரவலை ஒமைக்ரான் வகை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் சிலா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.


எனவே, புதிதாகப் பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டு உலகம் கொரோனாவிலிருந்து விடுபடும் ஆண்டாக இருக்கும் என்பது அவா்களது எதிா்பாா்ப்பாக உள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments:
Write comments