இலங்கையில் உண்ணி காய்ச்சல் - ஒருவர் உயிரிழப்பு


 உண்ணி காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (19) 3 நாட்களுக்குப் பின் அவர் உயிரிழந்தார்.


யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே உயிரிழந்தார்.


கடந்த 16 ஆம் திகதி காலை உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


எனினும் சிகிச்சை பயனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.


அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.


இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.


No comments:
Write comments