சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர்களை செலுத்த தீர்மானம்


சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் நியமங்களுக்கு அமைவாக உர இருப்புக்களை மீண்டும் உற்பத்தி செய்யுமாறு நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.


சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய சீன நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேதன உர மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சீனாவில் இருந்து சேதன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

No comments:
Write comments