துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று (24) இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Write comments