கத்தார் மீதான மோதல் முடிவு: வளைகுடா தலைவர்கள் GCC இல் கைச்சாத்து!ஈரானுடனான பிராந்திய பதட்டங்கள் அதிகரித்திருக்கும் இந் நேரத்தில்வளைகுடா ஒற்றுமை சீர்குலைய காரணமாக அமைந்த கத்தார் உடனான நீண்டகால அரசியல் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில்GCC (Gulf Cooperation Council) உச்சிமாநாட்டில்வளைகுடாவின் அரபு தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கைசாத்திட்டனர்.

சவூதி அரேபியாஐக்கிய அரபு அமீரகம்பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கத்தார் உடனான இராஜதந்திரவர்த்தக மற்றும் பயண உறவுகளை துண்டித்தன.

சவூதி அரேபியா தனது வான்வெளிகடல் மற்றும் நில எல்லையை கத்தாருக்கு மீண்டும் திறக்கும் என்ற அறிவிப்பின் பின்னர்அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையெழுத்திட கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிசவூதி அரேபியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான அல்உலாவில் செவ்வாயன்று நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.

ஈரானுக்கு எதிராகஇஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளை உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு வாஷிங்டன் கோரிய தொடர்ச்சியான மத்திய கிழக்கு ஒப்பந்தங்களில் சமீபத்திய ஒப்பந்தம் இதுவாகும்வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் இம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தடை நீக்கம் தொடர்பாக ரியாத் தெளிவுபடுத்திய போதிலும்மற்ற மூன்று நாடுகளும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக எந்த விதமான கருத்தும் தெரிவித்திருக்கவில்லைஆனால் அமெரிக்க அதிகாரி கூறுகையில் “இது எங்கள் எதிர்பார்ப்பு” இவ் ஒப்பந்தத்தின் கீழ்புறக்கணிப்பு தொடர்பான வழக்குகளை கத்தார் நிறுத்தி வைக்கும் என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்குரியாத்துடன் உரையாடலுக்கான கதவு திறந்திருப்பதைக் காட்டசவுதி அரேபியா ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளதாக இராஜதந்திரிகள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்பைடன் சவுதி அரேபியாவின் மீது அதன் மனித உரிமைகள் பதிவு மற்றும் யேமன் போர் தொடர்பாக ஒரு கடினமான வழியை கடைபிடிக்க போவதாக சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ் ஒப்பந்தம் வளைகுடா நாடுகளுக்கிடையில் சமரசம் செய்ய மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டாலும்இவ் ஒப்பந்தம் உள்வரும் பைடன் நிர்வாகத்தின் அழுத்தத்தை முன்கூட்டியே அகற்றுவதற்கான எண்ணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கதுஇது மோதல் தீர்வுக்கான உண்மையான உறுதிப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த அதிகாரி எமடெடின் பாடி கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகமும், எகிப்தும், லிபியா மற்றும் முஸ்லீம் பிரதர்ஹுட் (Muslim brotherhood) குறித்து கத்தாருடன் முரண்பாட்டில் உள்ளன.

கத்தாருக்கு சொந்தமான அல் ஜசீரா டிவியை மூடுவதுஒரு துருக்கிய தளத்தை மூடுவது முதல் முஸ்லீம் பிரதர்ஹுட் உடனான தொடர்புகளை துண்டிப்பது மற்றும் ஈரானுடனான உறவுகளை குறைப்பது என்று 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப் புறக்கணிப்பு கத்தாரின் இறையாண்மையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறும் கத்தார்எந்தவொரு தீர்மானமும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

எவ்வாறாயினும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகும்கத்தார் பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளத்தை கொண்டுள்ளதுபஹ்ரைன் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை தளத்தை கொண்டுள்ளதுசவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்க துருப்புகளை கொண்டுள்ளன.