புதிய குரல் ஸ்தாபக பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு அரச விருது! குழுமதின் வாழ்த்துக்கள்

 


கிழக்கு தமிழ் இலக்கிய விழாவில் விருது பெற புதிய குரல் ஸ்தாபக பணிப்பாளர் சபை உறுப்பினர் முகம்மது அபூபக்கர் முகம்மது றமீஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது குழுமத்திற்கு மிகப்பெரும் சந்தோசம் தரும் செய்தியாகும் என புதிய குரல் ஊடக நிறைவேற்று பணிப்பாளர் நாகேஸ்வரன் குருபரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த இரண்டு தசாப்தங்களாக ஊடகம், இலக்கியம் என பல்வேறு ஆளுமைகளை றமீஸ் அவர்கள் இதுதவிர ஏனைய விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார், புதிய குரல் ஊடகத்தின் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை குழுமத்திற்கான ஆலோசனை மற்றும் இதர பணிகளிலும் அவர் செயலாற்றிக்கொண்டிருப்பது எமக்கும் எமது நிறுவனத்திற்கும் பெரும் பாக்கியமாகும். 

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாக கொண்ட எம்.ஏ.றமீஸ் அவர்கள் பாடசாலை காலம் முதல் தன் தனித்திறமை காரணமாக எப்போதும் சமூக மட்டத்தில் முன்னிலையில் திகழ்கிறார். இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பிரத்தியேக செய்தியாளராக நெடுகாலமாக பணிபுரியும் எம்.ஏ றமீஸ் அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

புதிய குரல் ஊடக நிறுவன தலைவர், அதிகாரிகள், ஏனையோர் சார்பில் எம். ஏ றமீசுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு அவருக்கு இன்னும் பல விருதுகள் அங்கீகாரங்கள் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றார்.