விவேகானந்தரின் ஜனன தினத்துக்கு அனுமதி மறுப்பு

 


சுவாமி விவேகானந்தரின் 158வது ஜனதினம் அனுஷ்டிக்க சுகாதார தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியினை நகரசபையினர் சுத்தம் செய்து இன்று (12) ஜனனதினத்தை அனுஷ்டிப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்த போதிலும் அதற்கு சுகாதார பிரிவினர் தடை விதித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 124 ஆக அதிகரித்துள்ளமையினால், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நிகழ்வினை நடத்த சுகாதார பிரிவினர் தடையுத்தரவு பிறப்பித்தனர்.