ரஞ்சன் ராமநாயக்க எம்பிக்கு 4 ஆண்டுகள் சிறை!

 


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க எம்.பிக்கு 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத்த தண்டனை விதித்து இன்று (12) சற்றுமுன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி பிரதி அமைச்சராக இருந்த ரஞ்சன் ராமநாயக்க, ‘நாட்டில் உள்ள நீதிபதிகள் – சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள்‘ என குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கருத்தின் ஊடாக நீதிமன்றத்தை ரஞ்சன் ராமநாயக்க அவமதித்தாக கூறி, மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.