அலிசாஹிர் மௌலானா முஸ்லிம் காங்கிரசை விட்டு விலக என்ன காரணம்?

 


தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியத்திற்காக அலி ஸாஹிர் மௌலானா சஜித்துடன் கைகோர்த்தார். ஆனாலும் உத்தியோகபூர்வமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதாக எந்தவொரு செய்தியும் வெளிவரவில்லை. அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட மதங்களின் பெயரால் உள்ள கட்சிகள் எதிர்காலத்தில் தடை செய்யப்படவுள்ளதாக அரச தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இன்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியத்திற்காக சஜித் பிரேமதாசவுடன் கைகோர்க்கப்போவதாக தெரிவித்தார்.

1988 முதல் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர், 2015 ல் சமூக வலுவூட்டல் இராஐங்க அமைச்சராக இருந்தார்.

1994 ஆகஸ்ட் 16 முதல் 2004 ஜூன் 23 ஆம் திகதி வரை யு.என்.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், எல்.ரீ.ரீ.ஈ தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்றத்தில் இருந்து விலகினார், பின்னர் அமெரிக்காவின் இலங்கை தூதரகத்தில் மூத்த இராஜதந்திரி கடைமையாற்றினார்.

2010 ல் இலங்கைக்கு திரும்பிய அவர் எராவூர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 2015 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.