டயானா கமகே பதவி பிரமாணம் செய்யும் போது இரட்டைக் குடியுரிமை கொண்டவர்!நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் அளித்த வாக்குகளை அந்த மக்களின் எண்ணங்களை புறக்கோட்டையில் உள்ள விபச்சார விடுதிகளுக்கு விற்பனை செய்வது போல காட்டிக் கொடுத்து 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்யும் போதும் இரட்டை குடியுரிமை கொண்ட நபராக இருந்துள்ளார் என்பதை லங்கா ஈ நியூஸ் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தி இருந்தது. இவர் மாத்திரமன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்பதை லங்கா ஈ நியூஸ் சுட்டிக்காட்டி இருந்தது. சுரேன் ராகவன் கனேடிய குடியுரிமை கொண்டவர் என வெளிப்படுத்தி இருந்தோம். டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் என்பதை நாம் வெளிப்படுத்தி இருந்தோம். எனினும் அது தொடர்பில் எந்த ஒரு அரசியல்வாதியும் கணக்கில் எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை கொண்டுள்ளவர் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இங்கு காணப்படுவது 2014 ஆம் ஆண்டு sendagift.lk என்ற வியாபாரம் ஒன்றை லண்டன் வுட்பேரி வீதியில் உள்ள முகவரி ஒன்றை குறிப்பிட்டு பிரித்தானியாவில் வியாபார பதிவு செய்யும் கம்பெனி ஹவுஸ் என்ற பிரிவில் பதிவு செய்துள்ளமைகான ஆதார சான்றிதழ் தரப்பட்டுள்ளது. அதில் டயானா கமகேவின் தேசம் பிரித்தானியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் 2014 ஆம் ஆண்டு டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருந்துள்ளார். 

தற்போதைய புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சரத்துக்களின் அடிப்படையில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கவில்லை. அதனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களுக்கு இரட்டை குடியுரிமை இருக்க முடியாது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ள போதும் அது எதிர்காலத்திற்கு மாத்திரமே என்பது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலம் குறித்து அதில் எவ்வித சரத்துக்களும் உள்ளடக்கப்படவில்லை. அதன்படி ஆகஸ்ட் 20 ஆம் திகதி இரட்டை குடியுரிமை கொண்ட யாரேனும் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தால் அவரை பதவி நீக்கம் செய்ய நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியும். அதன்படி டயானா கமகேவிற்கும் கீதா குமாரசிங்க போன்று வீடு செல்ல நேரிடும். எந்த ஒரு வாக்காளரும் தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து டயானா கமகேவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க முடியும் கீதா குமாரசிங்கவிற்கு எதிராக நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் இதனை சுலபமாக செய்ய முடியும். கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்த போது அவர் சுவிஸ் நாட்டின் பிரஜையாகவும் இருந்துள்ளார் ஆனாலும் வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர் தன்னுடைய சுவிஸ் நாட்டு குடியுரிமையை நீக்கிக் கொண்டு உள்ளார். எனினும் சத்தியப் பிரமாணம் செய்த போது சட்டத்தில் இருந்த ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. இதே நிலைமை டயானா கமகேவிற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டயானா கமகே தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் 2020 ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் அவர் தன்னுடைய பிரித்தானிய குடியுரிமையை நீக்கிக் கொண்டதாக பிரித்தானியாவில் வழங்கப்பட்ட சான்றிதழை முன்வைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்று அவரிடம் இல்லை என்பதை லங்கா ஈ நியூஸ் உறுதியாகக் கூறுகிறது. அப்படி முடியும் என்றால் டயானா கமகேவுக்கு குறித்த சான்றிதழை பகிரங்கமாக வெளியிடுமாறு லங்கா ஈ நியூஸ் சவால் விடுகிறது. 

யார் இந்த டயானா கமகே?

டயானா கமகே என்ற அரசியல் விபச்சாரியிடம் எந்த ஒரு ஆண் மகனும் வந்து உணவு உட்கொண்டு செல்லும் வயல் உள்ளது. அவர் தனது வயலில் உணவு உட்கொள்ள வழங்கி பல வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வார். குறிப்பிட்ட காலம் இந்த வயலில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவராக கருதப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் உணவு உட்கொண்டு வந்தார். தற்போது இந்த வயலுக்கு உரிமையாளராக கேப்டன் சேனக சில்வா இருந்து வருகிறார். இந்த வயலுக்கு எழுத்து மூலமாக உறுதிப்படுத்த ஆவணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் சேனக சில்வாவும் தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு இந்த வயலில் உணவு கொடுத்து தன்னுடைய தனிப்பட்ட காரியங்களை சாதித்துக் கொள்வார். 

டயானா கமகே பசில் ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயல்படுவது கடந்த 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் மாத்திரம் அல்ல என்பது தெளிவாகிறது. மாறாக டயானா தனது கட்சியை சஜித் பிரேமதாசவிற்கு ஒப்படைக்கும் போதிலிருந்தே இந்த தொடர்பு இருப்பது அம்பலமாகிறது. 

சேனக்க சில்வா மற்றும் டயானா கமகே ஆகியோரின் பெயர்கள் மூலம் 'டெலிபோன்' சின்னத்தில் பதிவு செய்யப்பட்ட 'அப்வே ஜாதிக பக்சய' என்ற கட்சியை சஜித் பிரேமதாச என்ற உறுப்படி இல்லாத அரசியல் வாதி விலைக்கு வாங்கி அவரது ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக பிளவு படுத்தினார். அப்பே ஜாதி பக்சய என்ற கட்சியின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி என சஜித் பிரேமதாச பெயர் மாற்றம் செய்ததோடு அந்தக் கட்சியின் தலைவராக தன்னையும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் நியமித்துக் கொண்டார். இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியை பிளவுபடுத்தி புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கிய பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். கட்சியை விலைக்கு வாங்கும் போது சேனக்க சில்வாவிற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு டயானா கமகேவுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அப்படி இல்லாவிட்டால் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களாக சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க அல்லது சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோர் இருந்திருப்பர். எந்த ஒரு தேசிய பெறுமதியும் இல்லாத டயானா கமகே என்ற அரசியல் விபச்சாரிக்கு வழங்கிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க அல்லது சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோரில் ஒருவருக்கு வழங்கியிருந்தால் இன்று சஜித் பிரேமதாசவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசியலில் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு தன்னுடைய கட்சியில் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமை காரணமாக ஒழுக்காற்று நடவடிக்கை கூட எடுக்க முடியவில்லை. காரணம் அப்பே ஜாதிக பக்சய என்ற கட்சியை பெயர் மாற்றம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் மாத்திரமே மாற்றங்கள் செய்யப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த கட்சியில் உள்ள ஏனைய முக்கிய பதவிகளில் குறிப்பாக செயற்குழு மத்தியகுழு அரசியல் குழு என்பவற்றில் டயானா கமகே மற்றும் சேனக்க சில்வா ஆகியோரின் நண்பர்களே உள்ளனர். அதனால் டயானா கமகேவிற்கு எதிராக சஜித் பிரேமதாச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் அதன் மூலம் சஜித் பிரேமதாசவின் கட்சித் தலைவர் பதவியும் பறிபோகும் என்பதே இங்கு குறிப்பிட வேண்டிய நிதர்சனமான உண்மை. 

சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது எந்த ஒரு நிபந்தனையும் இன்றி தனது பெயரில் உள்ள இரண்டு கட்சிகளை சஜித் பிரேமதாசவிற்கு வழங்க அஜந்த சொயிஸா முன்வந்தார். அஜந்த சொயிஸா என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கிய தலைவரும் நற்பெயர் கொண்ட சட்டத்தரணியுமான பண்டி சொயிஸாவின் மகன் ஆவார். அந்த நேரத்தில் அதனை மறுத்த சஜித் பிரேமதாச சதிகார கும்பலில் உள்ள சேனக்க சில்வா மற்றும் டயானா கமகேவின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து வலையில் மாட்டிக் கொண்டார். அதன் போது ரஞ்சித் மத்தும பண்டாரவும் டயானா கமகேவின் வயலில் உணவு உட் கொண்டிருந்ததால் சஜித் பிரேமதாச வலையில் சிக்கும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

“வாழ்க்கை அழகான ஒன்று, ஆனால் காட்டிக் கொடுப்பு அழகு இல்லை, கேவலம்..”  

எனினும் சேர்க்க சில்வா என்பவர் தனது பெயரின் கீழ் உள்ள டெலிபோன் சின்னத்தை ஒவ்வொரு நபர்களுக்கு விற்பனை செய்து தனது தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி கூட்டணி உருவாக்கிய போது தேர்தலில் போட்டியிட சின்னம் ஒன்றை தேடிக் கொண்டிருந்த போது செயல் சேர்க்க சில்வா டெலிபோன் சின்னத்தை விற்பனை செய்ய சூழ்ச்சிகளை செய்த போதும் அப்போது நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த புத்தியுடைய நபர்கள் அதிலிருந்து தப்பித்து விட்டனர். அன்னம் சின்னத்தை அவர்கள் பெற்றுக் கொண்டனர். ஆனால் இன்று சஜித் பிரேமதாசவிற்கு கொஞ்சம் ப்லெடின் குடித்துவிட்டு உறங்க வேண்டி உள்ளது. 

இந்த கட்டுரை முடிவில் சுகதபால டி சில்வா தனது நாடகத்தில் கூறியுள்ள ஒரு அம்சத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வாழ்க்கை என்பது அழகானது ஆனால் காட்டிக் கொடுப்பு அழகல்ல, கேவலம்.