முஸ்லீம்களின் ஜனாசா உரிமைக்காக சாணாக்கியன் நாடாளுமன்றில் குரல்! முஸ்லிம்கள் ஆதரவு

 


கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற அவர்களது கோரிக்கை மதிக்கப்படாதது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

முஸ்லீம்கள் குரானின் அடிப்படையில் வாழ்பவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நீஙகள் அரசியலுக்காக இறுதிசடங்கினை பறிக்கின்றீர்கள் நீங்கள் இதற்காக வெட்கமடையவேண்டும் நானும் வெட்கமடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.


20வது திருத்தத்திற்கான வாக்களிப்பின் போது பல முஸ்லீம்நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து நான் வெட்கமடைகின்றேன் எனவும் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.
திருமலையைச் சேர்ந்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காததால் முஸ்லீம்கள் நீதிமன்றத்தினை நாடவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்