சஹ்ரான் தொடர்பில் கசிந்துள்ள புதிய இரகசியங்கள்! அரசு பதிலளிக்குமா?கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஏசு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கை கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து பிரதான நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்  தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக தற்போது வரை பெறப்பட்ட சாட்சிகள் மற்றும் வௌியிடப்பட்டுள்ள உண்மைகள், ஊடக செய்திகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட, காயமடைந்த, பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் வேண்டி நிற்கும் நிலையில் கீழ் காணும் கேள்விகளுக்கு பக்கச்சார்பற்ற பதில்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

01. 2010ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சஹரான் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்களுக்கு அப்போதைய அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் வழங்கியது ஏன் ?

02. தற்கொலை தாக்குதல் நடத்தக் கூடிய குண்டு தயாரிக்கவென சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு தொழிநுட்ப அறிவு மற்றும் பயிற்சி கிடைத்தது எவ்வாறு ?

03. முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சாட்சி அளித்துள்ளதன் படி தெஹிவளையில் குண்டு வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரி குண்டு வெடிக்கச் செய்வதற்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார் ? அது தொடர்பில் விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்.. ?
 
04. தாக்குதல் திட்டம் தொடர்பில் முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தெரிந்து கொண்டும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காது படைகளின் சேனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூருக்கு அவசர விஜயம் மேற்கொண்டது ஏன்.. ? ( மைத்திரிபால சிறிசேன தாக்குதல் நடத்தப்படும் என முன்கூட்டியே தெரிந்தும் வௌிநாடு சென்றதான பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ சாட்சி அளித்துள்ளார். )

05. தாக்குதலின் பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி ஊடாகவேனும் தொடர்பு கொள்வதற்கு முடியாமல் போனது ஏன்.. ? அவர் தாக்குதலின் பின் உடனடியாக நாடு திரும்பாமல் இருக்க காரணம் என்ன.. ?

06. நாட்டில் ஏற்பட்ட அவசர நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த அவசர பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படை தளபதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியது ஏன்.. ?

07. சஹரான் தொடர்பில் நீண்ட விசாரணை மேற்கொண்ட அப்போதைய பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரதானி பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை சிறை வைத்தது ஏன்.. ? நாலக்க சில்வாவிடம் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு மேலதிக சாட்சிகளை பெறாதது ஏன்.. ?

08. நாமல் குமார என்ற நபரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ கொலை சதித் திட்ட வழக்கு விசாரணை ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின் நிறுத்தப்பட்டது ஏன்?

09. 2012ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை ஊடாக அரச ஊடக வளத்தை பயன்படுத்தி சஹரான் உள்ளிட்ட அடிப்படைவாதிகளின் கொள்கைளை உபதேசங்களை நேரடி ஒளிபரப்பு செய்தமை தொடர்பில் விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன் ? இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆலோசனை மற்றும் நிதி உதவி செய்தது யார் ?10. சஹரானின் மனைவியான பாதிமா காதியா ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அளித்த சாட்சிகள் எதுவும் ஊடகங்களுக்கு வௌியிடப்படாமல் இருப்பது ஏன் ?  

11. மாவனெல்ல நகர் புத்தர் சிலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை உடனடியாக விடுதலை செய்ய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது யார். ?

12. வனாத்தவில்லு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் குறித்து சட்ட விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன்?

13. ராஜபக்ஷ அணியின் கடும் எதிர்ப்பு மற்றும் கோபத்திற்கு உள்ளாகி இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த தேர்தல் காலத்தில் தாமரை மொட்டு கட்சி கூட்டணியின் தவிசாளராக நியமிக்கப்பட்டது ஏன்.. ?  

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தவர்கள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கவும் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிந்து கொள்ளவும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கவும் மேற்கூறிய கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தே ஆக வேண்டும்.