கல்முனையில் மாபெரும் கொரோனா (COVID-19) விழிப்புணர்வு செயற்திட்டம்

 

 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், தென்மராட்சி சேவை நிறுவனம் கனடா, நடாத்தும் மாபெரும் கொரோனா (COVID-19) விழிப்புணர் செயல்திட்டம்.“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்தியத்தில் இன்று(22) இடம்பெற்றது.

கொரானா (COVID-19) பற்றிய ஒரு மாபெரும் விழிப்புணர்வு வழங்கும் இந்தச் செயல்திட்டமானது இலவச முகக்கவசம் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொது மக்களுக்க்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது அம்பாரை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் ,கரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சிவலிங்கம் ,கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி அர்சாத் காரியப்பர் மற்றும் முக்கியஸ்தகர்கள் பலர் இதன் போது கலந்து கொண்டனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்தப் பிரதேசங்களில் இவ் செயல்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்