மூதூரில் வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் வைபவம்

 
 ஹஸ்பர் ஏ ஹலீம்_கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின்  திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்குரிய வீடமைத்தலுக்கான அடிக்கல் நடும்  நிகழ்வு இன்று(12) சம்பூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் வீட்டிற்கான அடிக்கல்லினை இதன்போது நட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக  நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர், சம்பூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்