நாட்டில் பரவும் கொரோனா; ஆராய்ச்சியில் வௌியான அதிர்ச்சித் தகவல்

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் 
´B.1.42´ 
என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
   குறித்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
   தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், சனிக்கிழமை (31) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
   இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படைக் கொத்தணிகளின் வைரஸ்
 B.1, B.2, B 1.1 மற்றும் 
B.4 
குழுக்களுக்கு உட்பட்டவை என, ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
   இந்த வைரஸ் விசேடமானது எனவும், மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும், அவருடைய ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
   இது, எந்த நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தது என்பது தொடர்பில், தொடர்ந்தும் ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும், நிச்சயமாக இது இலங்கையில் இருந்து பரவிய  வைரஸ் அல்ல  எனவும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்