வீடுகளில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்வது தொடர்பில் புதிய முறைமை

 

  

மினுவாங்கொடை நிருபர் 


   கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலை நீங்கும் வரையில், வீடுகளில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்வது தொடர்பில் பதிவாளர் நாயகத்தினால் புதிய முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

   குறித்த மரணம் தொடர்பில், கிராம சேவகரினால் அறிக்கை வழங்கப்படும்போது, இந்த  மரணம் கொரோனாத் தொற்றினால் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   அத்துடன், வீட்டில் இடம்பெறும் மரணம் தொடர்பில், கிராம சேவகரின் அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்கு மேலதிகமாக, பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையும், பிறப்பு மற்றும் இறப்புக்களைப் பதிவு செய்யும் பதிவாளரினால் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்