கெமுனுபு மயில் தீவு பிரதான வீதி காபட் வீதியாக கபில நுவான் எம் பி யால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு

 

 
ஹஸ்பர் ஏ ஹலீம்_


திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெமுனுபுர பாலத்தில் இருந்து மயில் தீவு பிரதான வீதிக்கான புதிய காபட் பாதைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று (22) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மர நடுகையும் இதன் போது இடம் பெற்றது. 

சுமார் 400 மீற்றர் நீளம் கொண்ட காபட் பாதை அண்ணளவாக 91 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பிலும் குறித்த காபட் வீதி அமையப் பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி, கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் சமன் ஏக்க நாயக்க, பிரதேச சபை உறுப்பினர்களான ஆர.எம்.றெஜீன்,அஸ்வர், தன்சூர் அலி,பரீதா மற்றும் தம்பலகாம பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்