திருகோணமலை நகர்புற புடவை கடை வியாபார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

 ஹஸ்பர் ஏ ஹலீம்_


கொரோனாவின் இரண்டாம் கட்ட வீரிய தாக்கத்தினால் தங்களது வியாபார நிலைமைகள் மிகவும் மோசமடைந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர்புற புடவைக் கடை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதைய தீபாவளி பண்டிகைக் காலம் நெருங்கி வருகின்ற போதும் வியாபார நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

இதனால் தாக்கள் வங்கிகளில் ஊடாக மேற்கொள்ளப்படும் காசோலை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு பொருளாதார கஷ்டங்களை எதிர் கொள்வதாகவும் தங்களது கடைகளில் வேலை செய்யும் கூலியாட்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பல இன்னல்களை எதிர் நோக்குவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.

கொவிட்19 காரணமாக பொது மக்கள் வெளியில் அத்தியவசிய உணவுப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்வதையும் இது தவிர்ந்த ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வமின்மை ஏற்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
தங்களது வியாபார இலாப நோக்கங்களை எப்போது மீட்டுக் கொள்ளப்போகிறோம் எனவும் அங்கலாய்க்கின்றனர்.