திருகோணமலை மாவட்டத்தின் லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

 

 எப்.முபாரக்  

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி  ஒருவர் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ரத்தினபுர தேவானந்த ஹிமி 68 வயதுடைய பௌத்த தேரரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

லங்காதுறையில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை (31)  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.பௌத்த தேரர் மனநிலை பாதிப்படைந்த நிலையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்