மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை வீடுகளில் இருந்தவாறு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி மேற்கொள்ளும் வகையில் திட்டம் ஆரம்பம்

 

 ஹஸ்பர் ஏ ஹலீம்_


திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை வீடுகளில் இருந்தவாறு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி மேற்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் (11) திருகோணமலை வலயக்கல்விப்பணிமனையில் வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும்,தம்பலகாமம் மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரன தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை விருத்தி செய்யும் நோக்கில் அவசியமான கையேடுகள் , மாதிரி வினாத்தாள்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கி கைக்கப்படவுள்ளது. இதற்கான நிதியுதவியுனை அகம் மனிதாபிமான வள நிலையம் வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் அகம்மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, உதவி இணைப்பாளர் அ.மதன் , அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்