தமிழன் அஞ்சலிக்க வீதி ஓரங்களும் இல்லையா? போலீஸாரிடம் கேள்வி

 

 விஜயரத்தினம் சரவணன்


விதைக்கப்பட்ட உறவுகளுக்காக அஞ்சலிகளை மேற்கொண்டே தீருவோம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளர்.

தமிழர்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, வீதி ஓரங்களிலும் இடம் இல்லையா எனவும் அவர்போலீஸாரிடம் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை சுத்தப்படுத்தும் பணிக்காக, 20.11.2020 இன்றையநாள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், மாவீரர்களது உறவினர்கள் பலரும் துயில்மில்லப் பகுதிக்கு சென்றபோது, குறித்த பகுதி இராணுவததின் பகுதி எனவும் அங்கு துப்பரவுப் பணிகளைச் செய்யமுடியதெனவும் அவ்விடத்திற்கு வருகைதந்த போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையல் அவர்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த மாவீரர் துயிலுமிலலம் அமைந்துள்ள பகுதி எமது பகுதியாகும். இந்த பகுதியில் நாம் வருடாவருடம் உயிர்நீர்த்த எமது உறவுகளுக்காக அஞசலிகளைச் செலுத்தி வருகின்றோம்.

இந் நிலையில் நாம் இம்முறை இங்கு அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதைத் தடுக்கும் நோக்குடனேயே இராணுவத்தினர் இங்கு, தற்போது இந்த பகுதியில் மரங்களை நாட்டுவதோடு, நாம் அஞ்சலி செய்யும் பகுதிவரையில் தமது இராணுவத் தடையினை விரிவாக்கியுள்ளனர்.

இராணுவமே தவறிழைக்கின்றது. எமது உறவுகளுக்காக, எமது மரணித்த உறவுகள் விதைக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளில், ஒரு சில மணிநேரம் நாம் அஞ்சலி செலுத்துவதை தடுப்பதற்கு, பலவாறாக இராணுவத்தினரே கெடுபிடிகளைச் செயகின்றனர்.

நாம் இப் பகுதியில் கடந்த பத்தொன்பது வருடங்களுக்கும்மேலாக எமது உறவுகளுக்கு நாம் அஞ்சலிகளைமேற்கொண்டுவருகின்றோம். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் துயிலும் இல்லப் பகுதி இராணுவத்தினரால் அடைக்கப்பட்டு அங்கு செல்லமுடியாத நிலையில். துயிலும் இலலத்திற்கு வெளியே அதன் அருகோடு அஞ்சலிகளை மேற்கொண்டுவருகின்றாம்.

விதைக்கப்பட்ட உறவுகளுக்காக அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் இங்கு வருகைதந்து தமது அஞ்சலிகளைச் செலுத்துவார்கள்.

இந் நிலையில் துயிலுமில்லத்தினையும் இராணுவத்தினர் சுற்றி அடைத்து அங்கு செல்லமுடியாத நிலையினை ஏற்படுத்திவிட்டு, தற்போது துயிலுமில்லத்தின் அருகே, வீதி அருகோடு நாம் அஞ்சலி செலுத்துவதையும் தடுக்க முயற்சிக்கின்றனர். அப்படிஎனில் துயிலுமில்லந்தான் இல்லை, தமிழர்கள் நாம் அஞ்சலி செலுத்துவதற்கு வீதியின் ஓரங்களும் இல்லையா?

எனவே எம்மை கைதுசெய்தாலும் பறவாயில்லை. நாம் இந்தப் பகுதியில் எமது உறவுகளுக்கான அஞ்சலிகளை மேற்கொள்வோம்.

அது தவிர துயிலுமில்லம் அமைந்துள்ள காணி இராணுவத்தினருடையதும் இல்லை. அவர்களுடைய காணி எனில் அவர்களை காணிக்குரிய அனுமதிப் பத்திரத்தினைக் காண்பிக்கச் சொல்லுங்கள்.

ஆகவே நாம் இப்பகுதியிலிருந்து செல்லமுடியாது. இங்கு நாம் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு, உரிய நாளில் நாம் எமது விதைக்கப்பட்ட உறவுகளுக்காக அஞ்சலிகளை மேற்கொள்வோம் - என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்