வரலாற்றுச்சாதனை படைத்தது மூதூர் ஜாயா வித்தியாலயம்


 


ஹஸ்பர் ஏ ஹலீம்_


2020 ஆம் ஆண்டிற்கான 5 ஆந் தர புலமைபரிசில் பரீட்சையில் 159 என்ற வெட்டுபுள்ளிக்கு (திருகோணமலை மாவட்டம்) மேல் 22 மாணவர்கள் சித்தியடைந்ததன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கான  மூதூர் வலயமட்ட பாடசாலைகளில் அதிகளவிலான சித்தியை பெற்ற பாடசாலை என்ற சாதனையை நிலைநாட்டியது தீ/மூதூர்/ஜாயா வித்தியாலயம்.

ஆரம்ப பிரிவு பாடசாலையான தி/மூதூர்/ஜாயா வித்தியாலயம் அதன் கல்வி வரலாற்றில் 2020 இல் நிலைநாட்டிய  அடைவுமட்டமே இதுவரையில் இந்த பாடசாலை பெற்ற அதிகூடிய சித்தியாக கணிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவிவரும் அசாதாரன சூழ்நிலையினையும் சவாலாக கொண்டு குறித்த சித்தியினை பெறுவதற்கு பெரிதும் உறுதுணையாக பாடுபட்ட பாடசாலையின் பிரதி அதிபர் எம். ஐ. எம். அனஸ் ஆசிரியர், திருமதி. பஸ்மிளா நஹ்பர் ஆசிரியை போன்றோரின் அர்பனிப்பு மற்றும் தியாகத்தின் வெற்றியே இதுவாகும்.அத்துடன் பாடசாலை அதிபர் திரு. வீ. எம். முசம்மில் அவர்களின் சிறப்பான வழிகாட்டலின் மூலமுமே குறித்த அடைவு இடம்பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சித்தியடைந்த மாணவர்களும், அவர்கள் பெற்ற புள்ளிகளும் வருமாறு, எம். ஆர். எம். ஹசன் (183), எம். ஆர். பஹத் (183), எம். எஸ். முஹமட் (180), ஜே. சனப் மிதா (178), ஐ. எம். சிமாம் அஹமட் (178), எஸ். எf. யூசுப் சலாஹி (176), எஸ். அஸ்மான் ஸாட் (175), என். எம். தின்னூரி (174), B. இசட். அஸ்மா (173), எம். எf. எம். அக்தாஸ் (172), ஏ. எம். எம். இஸாம் (171), எம். ஆர். எf. மரியம் (169), எம். எஸ். ஹனாப் அஹமட் (168), எச். அமல் பராஹ் (166), எச். ஹம்தான் யூசுப் (165), எம். ஆர். எம். சிமான் (164), எம். எம். அலின் சிமர் (164), எf. எம். பிலால் (163), என். எம். அப்றார் (163), எம். ஐ. சினாஹி மிஸ்னத் (163), எம். எச். சறான் ஸ்மாதி (161) மற்றும் எஸ். சைனப் மர்யம் (160) ஆகிய 22 மாணவச்செல்வங்களுமே குறித்த வெட்டுப்புள்ளியினை கடந்துள்ளனர்.

மேற்படி பரீட்சைக்கு தோற்றிய அணைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் அடைவுமட்டத்தினை அடைந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த வரலாற்றுச்சாதனையினை நிலைநாட்ட  உதவிய சக ஆசியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு மற்றும் நலன்விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் பாடசாலை பழையமாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.