முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் அஹதியா பாடசாலைக்கு காசோலை வழங்கி வைப்பு

 
சர்ஜுன் லாபீர்


முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் நிருவகித்து வரும் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு இயங்கும் கல்முனைக்குடி,மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கும் அஹதியா பாடசாலைகளுக்கான புத்தக காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(2) முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் மெளலவி ஏ அப்துல் அஸீம்(நளிமி) தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீரினால் அஹதியாபாடசாலை நிர்வாகிகளிடம் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்எம் ரம்சான் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.