காய்ச்சல், தடிமன், இருமல், தொண்டை வலி அறிகுறிகள் தெரிந்தால் அழைக்கவும்
 ( மினுவாங்கொடை நிருபர் )


   கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏதேனுமிருந்தால் மருத்துவமனைகளுக்கு வரும் முன், 
011 7966366 
எனும் இலக்கத்தை அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
   கொவிட்-19 பரவலைத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவித்தலின்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவினால் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
   இதற்கமைய, காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை நோவு, மூச்சுத்திணறல்  உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுமாயின், குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பில் தெரிவிக்க குறித்த இலக்கத்தை அழைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   இதேவேளை, இது குறித்து வேறு ஏதும் சந்தேகங்கள் ஏற்படுமிடத்து, 1919 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )