ஊழியர்கள் போக்குவரத்து பஸ்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

 

 

மினுவாங்கொடை நிருபர் 


   கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக, சுகாதாரப் பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பஸ் வண்டிகளை ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

   அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை அழைத்து வருவதற்கு இந்த பஸ் வண்டிகளை ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  
 இதன்படி, இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ள நிறுவனங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழுள்ள இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

   குறித்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஒன்லைன் மூலமாக கீழுள்ள மின்னஞ்சலுக்கு, வட்சப் இலக்கத்திற்கு அல்லது தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்பமுடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

  இணையத்தளம் - www.ntc.gov.lk
மின்னஞ்சல் - staffservices@ntc.gov.lk
வட்சப் இலக்கம் - 0704361101
தொலை நகல் - 0112503725
   இது தொடர்பிலான  மேலதிக விபரங்களுக்கு 1955 என்ற இலக்கத்திற்கு அழைத்துப் பெற்றுக் கொள்ள முடியும். 

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்