ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமற்ற நிறுவனங்களின் பெயர்ப்பட்டியல் அறிமுகம்

 

 ( மினுவாங்கொடை நிருபர் )


   தொழிலுக்குச் செல்லும் போது ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமற்ற நிறுவனங்களின் பெயர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
   இதன்பிரகாரம், முன்பு 84 ஆகக் காணப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
   குறித்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை மற்றும் தனது நிறுவனத்தின் தலைவரால் வௌியிடப்படும் சேவைக்கு அழைக்கும் கடிதத்தை ஊரடங்கு அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக பயன்படுத்த முடியும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
   இதேவேளை, முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின்  அனுமதியுடன் செயற்படும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவைப்படாது என்றும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்