கொரோனாவுக்கு தீர்வு காணும் வரை நாட்டைப் பாதுகாப்பாக முன் நகர்த்துவது அவசியம்

 

  மினுவாங்கொடை நிருபர் )


   கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்கான தடுப்பூசி அல்லது அதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வரை, நாட்டைப் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமுள்ளதென, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
   இதற்கிணங்க, நீதி மன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கொழும்பு, புதுக்கடை நீதி மன்றக் கட்டடத் தொகுதியில் வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
   கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத் தொகுதிச் சுற்றாடலில் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள்  இடம்பெற்றன. இதனை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவித்த போதே நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
   பொலிஸ் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியப்படுத்தல் பிரிவு ஆகியன இணைந்து மேற்படி நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தன.
   பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட நீதி மன்றக் கட்டடத் தொகுதியின் சுற்றாடலில் சனிக்கிழமை (31)  இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
   மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியப்படுத்தல் பிரிவுத் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட்  உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்