தித்திக்கும் தீபாவளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும் என வாழ்த்துகிறேன்


 


அபு ஹின்ஸா 


தீபாவளி என்பது மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் நிறைந்த தீப ஒளித் திருநாளாகும். அத்தகைய மங்களகரமான திருநாளில், தீபாவளியை கொண்டாடும் மக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தீபாவளித் திருநாள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வளமையையும் கொண்டு வந்து ஒவ்வொருவரின் வாழ்விலும் நிலை பெற்றிருக்க வாழ்த்துகிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

மேலும் அந்த தீபாவளி வாழ்த்து செய்தியில்,

மக்களை பெருந்துன்பத்துக்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை அழித்த தினமே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளித் திருநாள், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குகிறது.

தீபாவளிப் பண்டிகையன்று மக்கள் அதிகாலை எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடை அணிந்து, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, இறைவனை வணங்கி, உற்றார், உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டு, உற்சாகத்துடனும், குதூகலத்து டனும் வழமையாக கொண்டாடி மகிழ்வார்கள்.

அனால் இவ்வருடம் உலகை உலுக்கும் கொரோனா காரணமாக வீடுகளுக்குள் முடங்கி சுகாதார வழிமுறைகளை பேணி கொண்டாடும் நிலை தமிழ் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா தோற்று உட்பட தீயன பலதும் விலகி உலகில் நல்லன நடக்கவும் தித்திக்கும் தீபாவளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், வளங்களும் பெருகட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.