மூதூரில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

 ஹஸ்பர் ஏ ஹலீம்_மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் கொவிட் 19 அசாதாரண நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவுகள் வழங்கும் நோக்கில் நலன்விரும்பிகள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களால் ஒரு தொகை அரிசிப்பொதிகள் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக்கிடம்  நேற்று(05) வழங்கிவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மூதூர் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

05 கிலோகிராம் அரிசிப்பொதிகள 90 கிடைக்கப்பெற்றதாகவும் இவற்றுள்   கிண்ணியா HRF நிறுவனம்  50அரசிப்பக்கற்றைக்களையும்  , இதிகாசிக கொட்டியாரம மூல  ரஜமஹா விகாராதிபதிய 20 அரிசிப்பொதிகளையும், தனவந்தர் ஏ.டி.ஜயவர்தன அவர்கள்  20 அரிசிப்பக்கற்றுக்களையும் வழங்கியதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்வரிசிப்பொதிகள் இன்று தாஹா நகர்,மூதூர் மேற்கு, சேனையூர் மற்றும் மேன்கமம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.