விசேடமாக தயாரிக்கப்பட்ட முகக் கவசத்தை மாத்திரம் அணியுமாறு அறிவுறுத்தல்

  ( மினுவாங்கொடை நிருபர் )


   நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக, மக்கள் முகக்கவசங்களை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா அறிவுறுத்தியுள்ளார்.

   அதேநேரம், கொரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மாத்திரம், துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் எனவும், ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட  பாதுகாப்புடைய முகக்கவசங்களையே அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

   உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய,  இந்தத் தகவலை அவர்  வெளியிட்டுள்ளமை  குறிப்பிடதக்கது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்