கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பிணிக்கால கையேட்டை ஊரடங்கு நேரத்தின்போது பயன்படுத்த முடியும்

 




 ( மினுவாங்கொடை நிருபர் )


   நோய் நிலைமையுடன் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களை, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தாக்கத்தைச் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
   சுகாதார அமைச்சின் குடும்ப நலப் பிரிவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
   இவர்கள் தமது கர்ப்பிணிக் கால கையேட்டை, தனிமைப்படுத்தல் ஊரடங்குக் கால அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த முடியும்.
   ஏதேனும் நோயினால் பீடிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படாத சந்தர்ப்பங்களில், துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகின்றமையைக் கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
   மேலும், கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்களுக்கான சிகிச்சைகளை 24 மணித்தியாலங்களும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
   இந்த விடயம் தொடர்பில், அனைத்து அரச வைத்திசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்