கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர கோரிக்கை !!

 


 


நூருல் ஹுதா உமர்


கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, சிக்கியுள்ள இலங்கை பிரஜைகள் 17 பேர், தங்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டார் நாட்டுக்கு வந்து கொரோனா தொற்று காராணமாக, வேலை வாய்ப்பை இழந்துள்ளதோடு, நாடு திரும்ப முடியாமல் கடந்த 6 மாத காலமாக தவிப்பதாக தெரிவிக்கும் இவர்கள்,"தயவு செய்து இலங்கை அரசு எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்திற் கொண்டு மீள இலங்கைக்கு அழைக்குமாரு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என இவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தோஹா கட்டாரில் உள்ள கத்தாரி இன்வெஸ்ட்மென்ட் குழுமத்துக்கு சொந்தமான கட்டாரின் உம் பாபிலுள்ள, அல்-ஹலிஜ் சீமெந்து தொழிற்சாலையில் இவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்ததுடன் இப்போது தொழிலையும் இழந்துள்ளனர். இத்தொழிற்சாலை அமைந்துள்ள இடம் நகருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பாலைவனமாகும்.

"ஜனாதிபதியவர்களே, எமது குடும்பம் அநாதரவாகியுள்ளது", எவ்வாறாவது எம்மை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுங்கள்", "எவ்வாறாவது எம்மை இலங்கைக்கு அழைக்கவும்", "நாம் இலங்கைக்கு எவ்வாறாகவாவது வர விரும்புகிறோம்" எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள்  புகைப்படமொன்றை அனுப்பியதோடு, இவர்களை தொடர்பு கொள்ளுமாறு, +97466732391 எனும் இலக்கத்தை வழங்கியுள்ளார்கள்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்