தீபாவளி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது விண்ணொளி

 

 
விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு - மாமூலை விண்ணொளி விளையாட்டுக்கழகத்தினால், தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு நடாத்தப்பட்ட துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியில் முள்ளியவளை வித்தியா விளையாட்டுக்கழகத்தினை வீழ்த்தி, மாமூலை விண்ணொளி விளையாட்டுக்கழகம் கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டது.

குறிப்பாக இருபத்தைந்து விளையாட்டுக் கழகங்கள் பங்கெடுத்த இத் துப்பாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முள்ளியவளை வித்தியா விளையாட்டுக்கழகம் மற்றும், மாமூலை விண்ணொளிவிளையட்டுக்கழகம் என்பன தெரிவாகியிருந்தன.

அந்தவகையில் இத்துடுப்பாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியானது 15.11.2020 அன்று இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முள்ளியவளை வித்தியா விளையாட்டுக்கழகம் முலில் துடுப்பெடத்தாடத் தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியா விளையாட்டுக்கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட பத்துப் பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில், 7இலக்குகளை இழந்து 71ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் வித்தியா அணியின் சார்பில் சுஜீபவன் 25, ஜன்சித் 17, சங்கீத் 13ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

விண்ணொளி விளையாட்டுக்கழகம் சார்பில் பந்துவீச்சில் கீர்த்திகன், சஜித் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும், பிரியங்கன், பிறின்லி, பிரதீபன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தினர்.

இந் நிலையில் 72ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய விண்ணொளி விளையாட்டுக்கழகத்தினர் இறுதிப் பந்துப் பரிமாற்றத்தில் இரண்டு இலக்குகளை இழந்து வெற்றியீட்டியதுடன், கிண்ணத்தினையும் தமதாக்கினர்.

அந்தவகையில் விண்ணொளி விளையாட்டுக்கழகம் சார்பில் துடுப்பாட்டத்தில், பிரியங்கன் 34, சஜித் 27, பிறின்ஸ் 10ஓட்டங்களைப் பெற்றனர்.

அதேவேளை பந்துவீச்சில் வித்தியா விளையாட்டுக்கழகத்தின் சார்பில் வினோஜ் மற்றும், திருணீபன் ஆகியோர் ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தியிருந்தனர்.

இப்போட்டியினுடைய ஆட்டனாநாயகனாக விண்ணொளி விளையாட்டுக்கழக வீரர் சஜித் தெரிவுசெய்யப்பட்டதுடன், இத்தொடரின் ஆட்டநாயகனாக விண்ணொளி அணியின் பிரியங்கன் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன் இத் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக முள்ளியவளை வித்தியா விளையாட்டுக்கழக வீரரான கவிராஜன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

மேலும் இப்போட்டிக்கு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்