மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட தென்னிந்திய திரைப்பட பாடலுக்கு நிகரான இலங்கை தயாரிப்பு

 

 நூருல் ஹுதா உமர்.  


கல்முனை கிஷா பிலிம் மேக்கர்ஸ் என்டர்ட்டைமன்ட் தயாரிப்பில் தென்னிந்திய பாடல்களின் தரத்தில் உருவாகிய "கறுகறுத்தவளே" என்று ஆரம்பிக்கும் பாடல் வெகுவாக மக்களை கவர்ந்து  சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டும் பார்க்கப்பட்டும் வரும் எம் நாட்டு படைப்பாக இன்று மாறியுள்ளது.

கிழக்கிலங்கை இசையமைப்பாளர் சஜய்யின் இசையில் சன்ஜீவ் தன்னுடைய குரலில் இந்த பாடலை பாடியுள்ளார். இலங்கையின் வளர்ந்து வரும் இயக்குனர் டிலோஜன் இயக்கியுள்ள இந்த பாடலில் ஏனைய கலைஞர்களும் சிறப்பாக தம்முடைய திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இந்த பாடல் தற்பொழுது யூடியூப்பில் ஒரு வாரத்திற்குள் 75000 பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடதக்கது. கலைத்துறையில் தென்னிந்திய சினிமாத்துறைக்கு ஈடாக இப்படி ஒரு பாடல் எம் நாட்டில் குறிப்பாக கிழக்கிலிருந்து வெளி வருவது பாராட்டக்கூடியதாகும்.

பாடலை பார்வையிட
https://youtu.be/c5GN5YMtaX0

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்