கொரோனா கொத்தணியை இல்லாதொழிக்க இரண்டு மாதங்கள் தேவை

 

 



( மினுவாங்கொடை நிருபர் )


   இரண்டாவது கொரோனா பரவலை அடுத்து, நாட்டிலிருந்து கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் (நோயாளிகள்) சமூகத்தில் தீவிரமாகச் செயற்படும் இளம் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டால் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
   தற்போது புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களில் கண்டறியப்பட்ட தொற்று நோய்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
இருப்பினும், இது எதிர்வரும் நாட்களில் அதிகமான நோயாளர்களை அடையாளம் காண வாய்ப்பு இருப்பதை நிராகரிக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்