தம்பலகாமத்தில் குழாய் நீர் சீரின்மையால் மக்கள் அவதி

 

 ஹஸ்பர் ஏ ஹலீம்_


திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொறுப்பதிகாரிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் வழங்கப்படும் குழாய் நீர் சீரின்மையாக காணப்படுவதால் பாரிய குடி நீர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுகாகு முகங் கொடுப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

தற்போதைய மழை கால நிலமைகளின் போதும் குழாய் நீர் சீராக வருவதில்லை எனவும் தொடர்ச்சியான நீர் இன்மை காரணமாக நீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய கொவிட்19 காலப் பகுதி காரணமாகவும் அடிக்கடி கைகளை கழுவுதல் சுகாதார நடவடிக்கைகளை மேற் கொள்வதிலூம் சிரமங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். குழாய் நீர் தொடர்ச்சியாக வருவதில்லை ஒவ்வொரு நாள் விட்டு விட்டே நீர் விநியோகம் சீராக வருவதில்லை போன்ற சிக்கல்களும் ஏற்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர். 

ஒரு மாத காலத்துக்கும் இவ்வாறான குழாய் நீர் பிரச்சினை காணப்படுவதாகவும் மக்கள் அங்கலாக்கின்றனர். இது தொடர்பில் சீரான குழாய் நீர் விநியோக நடவடிக்கையினை தொடர்ச்சியாக தருமாறும் உரியவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்