ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்றில் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு

 

 
நூருல் ஹுதா உமர்


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலக காரியாலய நிர்வாகத்திற்குட்பட்ட இசங்கணிச்சீமை கிராம சேவகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிர் கன்று வகைகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

இசங்கணிச்சீமை கிராம சேவகர் அப்துல் ஹஸ்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று  பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யுப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மட் இர்பான், பள்ளிவாசல் பிரதம நிர்வாகி ஐ.கே. சுலைமா லெப்பை உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பயிர் கன்று வகைகளை வழங்கி வைத்தனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்