தம்பலகாமம் சிராஜ் நகர் கிளினிக் நிலையம் இனந்தெரியாதோரால் சேதம்

 

ஹஸ்பர் ஏ ஹலீம்


திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள கிரோமதய மருத்துவமாது கிளினிக் நிலையம் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று இரவு(10)உடைக்கப்பட்ட குறித்த சிகிச்சை நிலையமானது சேதமாக்கப்பட்டுள்ளதுடன் யன்னல் கண்ணாடி மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு அதற்குள் இருக்கும் சில சுகாதார பொருட்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பொது சுகாதார பரிசோதகரின் அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் தம்பலகாமம் பொலிஸாரும் இணைந்து மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பித்து வருகின்றனர்.