மஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம் முடிவைடகிறது - வெளியேறுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுப்பு

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   தேசிய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில், அவரது அலுவலத்தில் உள்ள அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து விட்டுச் செல்வற்கான ஆயத்தங்களை முன்னெடுத்து வருகிறார். 
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையினால், தேர்தல் ஆணைக்குழுவில் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். 
   தேசிய தேர்தல் ஆணையகத்தின் ஏனைய இரு உறுப்பினர்களும், முன்னதாகவே தங்கள் அலுவலங்களைக் காலி செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே, மஹிந்த தேசப்பிரியவும் தனது அலுவலகத்தைக் காலி செய்வதற்கான நடவடிக்கைகளை, தற்சமயம் முன்னெடுத்துள்ளார். 
   மஹிந்த தேசப்பிரிய தேர்தல் அலுவலகத்தில் சுமார் 37 வருட காலம் சேவை புரிந்துள்ளார். 
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் கீழ், ஐந்து புதிய ஆணையாளர்கள் தேசிய தேர்தல் ஆணையத்தில் நியமிக்கப்படுவார்கள். இது 19 ஆவது திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களை விட அதிகப்படியான எண்ணிக்கையாகும். 
   மஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்