சாய்ந்தமருது பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

  பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தருது பகுதியில் கடந்த  வியாழக்கிழமை (12) அதிகாலை வேளையில் காட்டுயானைகள் வருகை தந்து சொத்துக்களுக்கு சேதப்படுத்தியதை  அறிந்து வன ஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின்  இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ்  இன்று(15) பார்வையிட்டுள்ளார்.

குறித்த யானைகளின் தாக்குதலில் சாய்ந்தமருது வொலிவோரியன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது  கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை உடைத்து   அங்கிருந்த மரக்கன்றுகளையும்  சேதப்படுத்தியுள்ளதுடன் அதே தினம் (12 ) கல்முனை பகுதியில் அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை அருகில் உள்ள வீடொன்றின் மதிலை உடைத்து அங்கு நடப்பட்டிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி இருந்தது.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்த கோரிக்கையை அடுத்து இன்று(15) மாலை வன ஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின்  இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ்  சம்பவம் இடம்பெற்ற இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து சேத நிலமைகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன்  தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மை காலமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளுக்கு காட்டுயானைகள்  கூட்டமாக வருகை தந்த வண்ணம் உள்ளதுடன் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.குப்பை கூழங்களை மக்கள் கொட்டுவதனால்  இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக  மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும்  நிலை உருவாகியுள்ளது

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்