கல்முனை மாநகர சபை மேயருக்கு நன்றி தெரிவிப்பு.

 
 அபு ஹின்சா


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஷிபான் பீ.எம். அவர்களின் வேண்டுகோளின் பேரில் மருதமுனை ஐந்தாம் வட்டாரத்தில் ஒருதொகை LED மின் குமிழ்களை பொருத்திக் கொடுத்த கல்முனை மாநகர சபை மேயருக்கு ஐந்தாம் வட்டார மக்கள் சார்பில் உறுப்பினர் ஷிபான் பீ.எம் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபை முதல்வரின் சேவைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், 

இருளில் மூழ்கி இருந்த என்னுடைய வட்டாரத்தை இவ்வாறு கட்சி பேதம் பார்க்காது ஒளியூட்டிய கல்முனை மாநகர சபை மேயரின்  சேவை என்றும் இவ்வாறே தொடர வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம்.  

மேலும் இந்த கோவிட் 19 தொற்று காலத்திலும் கல்முனை மாநகர சபையின் சேவை அயர்ந்துவிடாது செவ்வணே அதனை நெறிப்படுத்தி வருகின்ற கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்  றகீப் அவர்களுக்கு எங்களுடைய மக்கள் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார். 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்